மனமென்னும் மாயாஜாலம் - 7
Google Buzz Logo

கடந்த அக்டோபர் 2004ல் வலைப்பூவிலிருந்து தமிழ்மணத்திற்கு தமிழ் வலைப்பதிவர்கள்/வருகையாளர்கள் மாறிய போது அறிமுகப்படுத்தப்பட்ட "இந்த வார நட்சத்திரம்" பகுதியில் முதல் நட்சத்திரமாய் நான் எழுதிய பதிவுகளில் மனம் பற்றிய தன்னம்பிக்கைத் தொடர் "மனமென்னும் மாயாஜாலம்".

மனமென்னும் மாயாஜாலம் - 1
மனமென்னும் மாயாஜாலம் - 2
மனமென்னும் மாயாஜாலம் - 3
மனமென்னும் மாயாஜாலம் - 4
மனமென்னும் மாயாஜாலம் - 5
மனமென்னும் மாயாஜாலம் - 6

பல ஞானிகளின் கருத்துக்களையும் எளிய பயிற்சிகளையும் உள்ளடக்கிய இந்தத் தொடரை இனி அவ்வப்போது தொடர்கிறேன், இனி வரும் இந்தப்பதிப்புகள் நம்பிக்கை குழுமத்திலும் மின்னஞ்சலாய் பதிக்கப்படும்.

எல்லாத்துக்கு மனசு தாங்க காரணம்

ஒரு பிரச்சனை நம்மை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அடுத்த கட்ட விளைவுகள் இருக்கின்றது. எந்த ஒரு பிரச்சனையும் நம்மை இரு விதமாய் பாதிக்கலாம். அது நம்மை அழிக்கும் வண்ணம் கவலையில் ஆழ்த்தலாம் அல்லது தீயிலிட்ட தங்கம் போல சோதனையில் நம்மை மேம்படுத்தலாம்.

இந்த இரண்டு வகை பாதிப்புகளில் எவ்விதமாய் பாதிக்கப் படுவதை நீங்கள் விரும்புவீர்கள்? நான் முன்பே சொன்ன படி வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே நான் இரண்டாவதைத்தான் விரும்புவேன்.

சரி, முதல் விதமாய் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்யலாம்? அதுக்கு முன்னால ஒரு சின்ன நிகழ்ச்சி:

ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். குழந்தை வளர்ந்து, மற்ற குழந்தைகளோடு விளையாட ஆரம்பித்த வயதிலே ஒரு சக குழந்தைக்கும் இந்தக் குழந்தைக்கும் சண்டை வருது. அப்ப சண்டை போட்ட குழந்தை இந்தக் குழந்தையை "போடா! டேய்! அனாதைப் பயலே" அப்படின்னு திட்டிடுச்சி.

ஒரு நிமிஷம் அமைதியா இருந்த இந்தக் குழந்தை "அனாதைன்னா என்ன தெரியுமா உனக்கு" அப்படின்னு கேட்டுச்சி

"எனக்கு தெரியாது, எங்க அப்பாதான் சொன்னாங்க.. நீ அனாதைன்னு" அப்புடின்னுச்சி சண்டை புடிச்ச குழந்தை.

அதுக்கு "நீங்க எல்லாம் உங்கம்மா வயித்துல வளந்தீங்க, நான் எங்கம்மா இதயத்துல வளந்தேன்" அப்படீன்னு சொல்லீட்டு வீட்டுக்கு போயிருச்சி அந்தக் குழந்தை.

யோசிச்சிப் பாத்தீங்கன்னா ஒரு விஷயம் நம்மை எப்படி பாதிக்கிறதுங்கறது அந்த விஷயத்தை நான் எப்படி எடுத்துக் கொள்கிறோம், அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் எனபதைப் பொறுத்து அமையுது.

ஒரு நண்பன் நம்மை "வெட்டி நாயே"ன்னு சொல்லும் போது நாம் அதை செல்லமாய்த் திட்டுவதாய் எடுத்துக்கறோம். அதையே வேறொருவர் சொல்லும் போது சண்டைக்கு போய் ரெண்டுல ஒன்னு பாத்துட்டுதான் மறுவேலை!

அதுக்காக சொரனையே இல்லாம இருக்கனும்னு சொல்லலை. உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தறீங்க, கோவத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கறீங்க இதையெல்லாம் கவனிச்சிப் பாத்தீங்கன்னா நாம அழிவடையறதும் சந்தோசமா இருக்கிறதும் இன்னொருத்தர் கையில இல்லை. அது நம்முடைய எண்ணம்/செயல்/பேச்சு முதலானவற்றையொட்டியே அமையுதுன்னு தெரியும்.

உங்களை யாராவது காயப்படுத்திட்டா அதனால உங்களுக்கு கோவம் வருதுன்னு வச்சிக்குவோம். பதிலுக்கு எதிராளியைக் காயப்படுத்துறதுனால நீங்க காயப்பட்டது சரியாகாது. உங்கள் காயம் ஆறவும் வேண்டும் அதே சமயத்தில் அந்த எதிராளி உங்களை எப்படி காயப்படுத்தியுள்ளார் என அவர் உணர தெரிவிக்கவும் வேண்டும் என்றால் அதற்கு ஆக்கபூர்வமாய் பல வழிகள் உள்ளன.

கோபத்துல இருக்கும் போது எப்படி சிந்திக்கிறோம்.. எப்படி சிந்தித்தால் நமக்கு நல்லது, அவ்வாறு சிந்திக்க கற்றுக் கொள்வது எப்படி என்று அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

3 கருத்து(க்கள்):

Suresh |

கோபி,
உங்கள் பதிவிற்க்கு முதல் முறையாக வருகிறேன். வாழ்த்துக்கள். அருமையாக இருக்கிறது. உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும், பிறகு சந்திப்போம்.

-சுரேஷ்


NambikkaiRAMA |

கோபி! அருமையான கட்டுரைகளை வெளியிட்டுள்ளீர்கள், மேலே பினூட்டம் கொடுத்தவர் முத்தமிழ் மன்றத்தில் கலக்கி கொ?ண்டு இருக்கும் பரஞ்ஜோதி என்ற சுரேஷ் என்றே நினைக்கிறேன். அவரும் உங்களைப்போல் இதில் மிக்க திறமையானவரே! வாருங்கள் சாதிப்போம்!


NambikkaiRAMA |

ஆஹா! இது UK சுரேஷா! அருமை!