வலைப்பூ - மொழிகள் ஒரு அலசல்
Google Buzz Logo

ஒரு விஷயத்தைப் பத்தி நாம தாய்மொழியில் தான் சிந்திக்கறோம்னு சொல்வாங்க இல்லையா ? அது உண்மையில்லை.

எப்படின்னு பாக்கலாம். இன்னும் சரியாக தாய்மொழியில் கூட பேசாத மழலை ஒன்றை கூட்டிக்கொண்டு கடற்கரை செல்வதாக் கொள்வோம், வண்டியிலிருந்து இறங்கி கடற்கரைக்கு சென்று அலைகளின் முன்னே அந்தக் குழந்தையை நிறுத்தினால் என்ன செய்யும்?

1) முதலில் அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பையும் அலைகளின் ஓசையையும் பார்த்து திகைப்படையும்
2) சற்றே பழகியபின் முன்னும் பின்னுமாக செல்லும் அலையை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும்
3) பிறகு அலைகளிலும் மணற்பரப்பிலும் விளையாடும்

இப்ப நாம விஷயத்துக்கு வருவோம். அந்தக் குழந்தை தமிழ்க் குழந்தையாயின் அதனிடம் நாம் கடற்கரையைக் காட்டி ஆங்கிலத்தில் பீச் என்று சொன்னால் அந்த பிம்பங்களையும் சத்தம் போன்ற உணர்வுகளையும் நீங்கள் சொன்ன "பீச்" என்ற வார்த்தையையும் உள்வாங்கி மூளையில் பதித்துக் கொள்கிறது.

பின்பு மீண்டும் ஒரு நாள் நீங்கள் "பீச்"சுக்கு போகலாம் என அந்தக் குழந்தையைக் கூப்பிட்டால் அது "பீச்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மூளையில் பதித்து வைத்துள்ள அலைகள், நீல நிற கடற்பரப்பு ஆகிய பிம்பகளாக அதை அர்த்தம் செய்து கொண்டு சந்தோசமாக துள்ளிக் குதித்துக் கிளம்புகிறது

நாம் ஒரு விஷயத்தை சிந்திப்பது பிம்பங்களாகவும் உணர்வுகளாகவும் மட்டுமே! அதை வெளிப்படுத்த வேண்டுமெனில் பிம்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் பொருத்தமாக மூளையில் பதிக்கும் போது எந்த மொழியில் பதிக்கிறோமோ அதே மொழியில் மொழி பெயர்க்கிறோம். அது தாய்மொழியாகவும் இருக்கலாம். வேறெதுவாகவும் இருக்கலாம்.

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம். தாய்மொழி தவிர மற்ற மொழிகள் பேச, எழுத, படிக்க நமக்கு ஏன் சிரமமாக இருக்கிறது? ஏனெனில் நாம் முன்பு சொன்னது போல பிம்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்துவது நாம் பதித்த மொழியை. பிறகே அதை மற்ற மொழியில் மொழிபெயர்க்கிறோம்.

ஒரு மொழி நமக்கு சரளமாக வர வேண்டுமெனில் நாம் பதித்துள்ள பிம்பங்கள் மற்றும் உணர்வுகளின் வார்த்தைகளையும் அந்த மொழியில் இணைத்து (linked-list) மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்

உதாரணத்துக்கு,

மழையின் பிம்பத்துக்கு "ரெயின்" என்று முதலில் கற்றவர் பின்பு தமிழில் அதன் சமான வார்த்தையான "மழை" என்பதை கற்கும் போது ( பிம்பம் => "ரெயின்" => "மழை") என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும். பின்னொரு நாளில் அவர் தெலுங்கு கற்றால் அதன் சமான வார்த்தை "வர்ஷம்" எனத் தெரிய வரும் போது மீண்டும் ( பிம்பம் => "ரெயின்" => "மழை" => "வர்ஷம்" ) என்று மூளையில் மறுபதிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாம் ஒரு மொழியில் பேசும் போது நேரடியாய் பிம்பங்களை அந்த மொழியிலேயே தொடர்புபடுத்திப் பேசுவோம். இதனால் மொழிபெயர்ப்பு நேரம் குறையும். மொழிபெயர்ப்பு நேரத்தை நாம் சரி கட்ட அடிக்கடி இடைவெளிகளில் உச்சரிக்கும் "ம்...", "ஆங்..." போன்ற அர்த்தமற்ற உளரல்கள் குறையும், பேச வந்த கருத்துதெளிவாகவும் சிறப்பாகவும் அமையும்

சரி. புதிதாய் ஒரு மொழியை கற்க என்ன செய்யலாம் ?

1) புத்தகங்களைப் படிக்கலாம்
2) இணைய தளங்களைத் தேடலாம் (உ.ம் தெலுங்கு கற்க http://sirigina.com/learn/ஐ நாடலாம்)
3) சிலகாலம் நண்பர்கள் வட்டாரத்தில் அனைவருமே அந்த மொழி மட்டும் பேசுபவர்களாக அமைத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு நீங்கள் பேசும் மற்ற ஏதேனும் ஒரு மொழி (உ.ம் ஆங்கிலம்) தெரிந்திருக்க வேண்டும்
4) அந்த மொழியில் வந்த திரைப்படங்கள், தொலைக்காட்சியை பார்க்கலாம்
5)அந்த மொழியில் வரும் திரைப்பட சுவரொட்டிகள், தினசரி/வார/மாத நாளிதழ்களைப் படிக்கலாம்

இப்படி எது செய்தாலும் மூளையில் நீங்கள் பதித்துள்ள பிம்பம்/உணர்வுடன் நேரடியாய் அந்த மொழியின் வார்த்தைகளை இணைத்து மறுபதிப்பு செய்ய வேண்டும்.

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

யப்பா...தம்பி தர்மராசு..நல்லா பன்றபா...ஜமாயி. நமுக்கு இந்த தமிழு தவற வேற ஒன்னும் தெர்யாதுப்பா..ஆளவுடு..நான் அப்றமேட்டுக்கு வறேன்!


பெயரில்லா |

மணிக்கு Kangs சொன்னது...

உங்கள் கருத்தை அமோதிக்கிறேன். நாம் தாய் மொழியில் சிந்திப்பதில்லை, முதல் முறை எந்த மொழியில் பதிவு செய்கிறோமோ, அந்த மொழியின் வார்த்தை கோர்ப்புக்களின் உதவியுடன் சிந்திக்கிறோம். புலம் பெயர்ந்த சில நண்பர்களிடம் பேசும் போது கமல் நடித்த படம் "வசுல் ராஜா- MBBS", பற்றிய விவாதம் தொடங்கியது. எனது நண்பர் Hindiyil முதன் முறையாக பார்த்த போது "Munna bai -MBBS" மிகவும் ரசித்து பார்த்தேன், ஆனால் வசுல் ராஜா அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்று கூறினார். நான் தமிழில் தான் முதன் முறையாக பார்த்தேன். அவர் சொன்னார் என்பதற்காக Hindi படத்தை வாங்கி வந்து "இணை எழுத்துக்களுடன்" படம் பார்த்தேன். எனக்கு என்னவோ தமிழில் அனைத்து பாத்திரங்களும் நன்றாக செய்திருப்பது போலவே இருந்தது. (அந்த பேசாமல் இருக்கும் பாத்திரம் தவிர, கிந்தி தமிழ் இரண்டிலும் ஒருவரே அந்த பாத்திரத்தை செய்து இருந்த போதும், எனது தனிப்பட்ட கருத்து - தமிழில் அந்த முகம் ஒட்டி போகாத மாதிரி தோன்றியது.). எதற்கு சொல்கிறேன் என்றால் எந்த மொழியில் முதலில் கேட்டு உணர்கிறோமோ அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். நான் TAAL படத்தினை கிந்தியில் முதலில் பார்த்தேன், எனவே அதனுடைய பாடல்கள் கேட்கும் போது (மொழி புரியாத போதும்) ஒரு ஈர்ப்பு இருக்கும், அதையே தமிழில் கேட்கும் போது அந்த அளவிற்கு ஈடு பாடு இல்லை.


பெயரில்லா |

மணிக்கு அதிரைக்காரன் சொன்னது...

நீங்கள் சொல்வது மிகவும் சரி கோபி. டைனோசாரைப் பற்றி பேசும்போது அல்லது படிக்கும் போது ஜுராசிக் பார்க்-கில் பார்த்த டைனோசார்தான் கண்முன் தோன்றும். இன்று உண்மையான டைனோசார் ம்நம்முன் வேறு உருவத்தில் தோன்றினால் கூட நம்ப மறுப்போம். அந்த அளவுக்கு காட்சியின் தாக்கம் நம்பிக்கைகளில் கூட பாத்ப்பு ஏற்படுத்தும். அதனால்தான் ஏட்டுக் கலிவியை விட செயல்முறை கல்வி சிறந்ததாகும் என்பது என் கருத்து.


அதிரைக்காரன் |

நீங்கள் சொல்வது மிகவும் சரி கோபி. டைனோசாரைப் பற்றி பேசும்போது அல்லது படிக்கும் போது ஜுராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார்தான் கண்முன் தோன்றும். இன்று உண்மையான டைனோசார் நம்முன் வேறு உருவத்தில் தோன்றினால் கூட நம்ப மறுப்போம். அந்த அளவுக்கு காட்சியின் தாக்கம் நம்பிக்கைகளில் கூட பாதிப்பு ஏற்படுத்தும். அதனால்தான் ஏட்டுக் கல்வியை விட செயல்முறை கல்வி சிறந்ததாகும் என்பது என் கருத்து