வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 5
Google Buzz Logo

உங்களுக்காக வாழுங்கள்

நமக்கு வாழ்நாள் எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது

ஆனா நூறு வருஷத்துக்கு மேல இருக்கறவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். நூறு வருஷம்னு வச்சிகிட்டாலும் இதுல தூங்கியே ஐம்பது வருஷத்த இழக்கறோம். அப்றம் காலைக்கடன் முடிக்கறதுல நாலு வருஷம், சாப்பிடுறதுல பன்னிரண்டு வருசம், படிப்புக்கு எட்டு வருஷம், வேலை செய்யுறதுக்கு மீதின்னு அப்படி இப்படின்னு பாத்தா நாம நமக்காக வாழ்ந்த காலம் ரொம்ப குறைவா இருக்கு

நாம நமக்காக வாழ்ந்த காலம்னா? அப்பாவுக்கு பிடிக்கும்னு நல்லா படிச்சதா? அம்மாவுக்கு பிடிக்கும்னு பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கறதா? இல்ல சிலருக்கு பிடிக்கும்னு சில விசயங்களை செய்யாம இருக்கறதா? இல்லன்னா சிலர் சில மாதிரி பேசிடக் கூடாதுன்னு செய்யுறதா?

இல்லவே இல்லை. யாரைப்பத்தியும் கவலைப்படாம, யாருக்கும் பிடிக்குமா பிடிக்காதான்னு பாக்காம. நம்ம இஷ்டப்பட்ட மாதிரி, நம்ம சந்தோசத்துக்காக இருக்குற காலம் தான் நாம நமக்காக வாழ்ந்த காலம்

நம்ம வாழ்நாள் எத்தனை முறை மூச்சு விட்டம்னு அளக்கப்படுறது இல்ல. சந்தோசத்துல எத்தனை முறை மூச்சடைச்சி நின்னோம்கிறதை வச்சித் தான் அளக்கப்படுது

நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்குது. எதை நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய். எதை விரும்புகிறாயோ அதையே அடைகிறாய் அப்படின்னு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க

அதனால

நமக்காக வாழ்வோம்! நலமாய் வாழ்வோம்!

1 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

நீங்க சொல்றமாதிரி நமக்குன்னு கூட இல்ல - எனக்குன்னு (எனக்கே எனக்கா...) வாழணும்னுதான் அப்பப்போ தோணும்.... அது எப்போ முடியும்னுதான் தெரியலை. வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி'ல வர்ர திருஞானம் மாதிரி சிலகாலமாவது வாழணும்... பார்க்கலாம்.

அதிருக்கட்டும், நமக்காக வாழ்வது சுயநலமில்லையா கோபி?

(இதை உங்களிடம் இங்கு கேட்பது, ஒருவேளை அந்தவசந்த காலத்தில் என்னை யாரும் கேட்டால் பதில்சொல்லும் வசதிக்காக:)